குரு ஜோதிடம் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் !!
ஜோதிட ஆசிரியர், சதீஷ்குமார் ஆகிய நான், திருவண்ணாமலையில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவன். தந்தையின் வழிகாட்டலின் படி, 17 வயதில் ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அப்பாவுடைய பிடிவாதத்தால், ஆர்வம் இல்லாமல் தான் படிக்க தொடங்கினேன். படிக்க தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு தான் , எனக்கு ஜோதிடத்தின் மீது படிப்படியாக அளவற்ற ஆர்வம் ஏற்பட்டது.
காரணம் நம்முடைய முன்னோர்கள் விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலகட்டத்திற்கு முன்பே, எந்த ஒரு கருவிகளையும் பயன்படுத்தாமல், ஒளியை மட்டுமே ஆதாரமாக கொண்டு, பூமியில் இருந்தபடியே வானில் 9 கிரகங்களையும், 27 நட்சத்திரக்கூட்டங்களையும் கண்டறிந்து. அக்கிரகங்கள், 27 நட்சத்திரக்கூட்டங்களோடு தோன்றுவதை அடிப்படையாக கொண்டு, அவற்றால் பூமியில் ஏற்படும் கால மாற்றங்களை உணர்ந்து, அதாவது இரவு, பகல், நாள், மாதம், வருடம் என்று கால கணக்குகளையும் மற்றும் கிரங்களின் வடிவம், நகர்வு, சுழற்சி போன்றவற்றையும், மேலும் இன்றைய நவீன விஞ்ஞானத்தாலும் மறுக்க முடியாத பல ஆச்சரியத்திற்குரிய கண்டுபிடிப்புகளையும், இந்த ஜோதிடம் என்கின்ற பொக்கிஷத்தின் மூலமாக நமக்கு கொடுத்துள்ளார்கள். இதை பற்றிய தேடுதலில் கிடைத்த அனுப்பவங்களை கொண்டு தான், இன்று நான் ஜோதிடராகவும், ஜோதிட ஆசிரியராகவும் என்னுடைய சேவையை செய்து கொண்டு இருக்கிறேன்.
மேலும் ஒன்பது வருடங்களாக, இந்த ஜோதிடத் துறையில் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறேன். அவ்வப்போது பல அரிய விஷயங்களை கட்டுரைகளாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ஜோதிட ஆர்வலர்கள் பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறேன்.
அது மட்டுமல்லாமல்,
“குரு ஜோதிடம்” என்கிற தனது YouTube சேனல் வாயிலாக, ஜோதிடத்தில் அடிப்படை விஷயங்களையும் மற்றும் புரிந்து கொள்ள சற்று கடினமான விஷயங்களையும் காணொளிகளின் வாயிலாக மிக எளிய முறையில் விளக்கம் அளித்து வருகிறேன். YouTube-ல் சுமார் 8,500 ஜோதிட ஆர்வலர்கள் / ஜோதிடர்கள் என்னை பின் தொடர்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
“குரு ஜோதிட பயிற்சி மையம்” வாயிலாக இதுவரை நான் ஜோதிடராக 7000 த்திற்கும் மேற்பட்ட ஜாதகங்கள் பார்த்திருக்கிறேன். ஜோதிட ஆசிரியராக, நேரடி வகுப்பின் மூலமகாவும் மற்றும் ஆன்லைன் வகுப்பின் மூலமகாவும், 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கிறேன். அதில் பலர் இன்று இந்த ஜோதிடத்தை முழு நேர தொழிலாகவோ அல்லது பகுதி நேர தொழிலாகவோ செய்து வருகிறார்கள்.
மேலும் telegram - ல் “குரு ஜோதிடம்” என்கின்ற குழுவில், என்னிடத்தில் ஜோதிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அக்குழுவை செயல்படுத்தி வருகிறேன். அக்குழுவானது ஜோதிடக்கலையை மேன்மேலும் வளர்க்கவும், நாமும் வளரவும் பெரிதும் பயன்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.