உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி – 3)

உயர்நிலை ஜோதிட பாடங்கள் பகுதி – 3 ல் இடம்பெரும் பாடத்தலைப்புகள். கீழ்வருமாறு

அ) கேபி ஜோதிடம் (கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை – கேபி ஜோதிடத்தில் தொழில் முறை விசயங்கள் பயிற்சி அளிக்கப்படும்.)

1) சொத்து (தந்தை வழி சொத்து, தாய் வழி சொத்து, சுய சொத்து, சொத்தில் வில்லங்கம், வீடு மனை, நிலம், வாகனம் அமைப்பு போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

2) நோய், கடன், பகை (நோய் என்றால் என்ன மாதிரியான நோய், குணப்படுத்த கூடிய நோய், குணப்படுத்த முடியாத நோய், நோயால் அறுவை சிகிச்சை மற்றும் இறப்பு ஏற்படும் அமைப்பு. கடன் என்றால் திருப்பி கொடுக்க கூடிய கடன், திருப்பிக் கொடுக்க முடியாத கடன், கடனால் தற்கொலை, தலைமறைவு ஆகும் அமைப்பு. பகை என்றால் தீர்க்க முடிந்த பகை, தீர்க்க முடியாத பகை, பகையால் வழக்கு, தற்கொலை, கொலை, இறப்பு ஏற்படும் அமைப்பு போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

3) ஆயுள் (உயிர் வாழும் காலம், அற்ப ஆயுள், மத்திம ஆயுள், தீர்க்க ஆயுள், கண்டம் என்றால் வாகனத்தால் கண்டம், மின்சாரத்தால் கண்டம், நீரால் கண்டம், நெருப்பால் கண்டம், இயற்கை சீற்றத்தால் கண்டம் போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

4) ஆளும் கிரகங்கள் (பிறப்பு நேரம் சரிசெய்தல் மற்றும் பிறப்பிற்கான பலனை துல்லியமாக அறிதல்)

5) கேபி முறையில் - எண்கணிதம் (நியூமராலஜி) (குழந்தைக்கு பெயர் வைத்தல், தொழிலுக்கு பெயர் வைத்தல் போன்றவை உதாரண ஜாதகத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.)

6) கேபி முறையில் - மணிவியல் (ஜெம்மாலேஜ்) (ரத்தின கற்கள் அணிதல், உதாரண ஜாதகத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.)

7) கேபி பிரசன்னம் (ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதக பலன் அறிய மற்றும் மனதில் எண்ணிவரும் கேள்விக்கு பதில் தருதல் போன்றவை உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

8) கடிகார பிரசன்னம் (நேரத்தை பயன்படுத்தி ஜாதகர் மனதில் எண்ணிவரும் கேள்விக்கு பதில் தருதல்.)

9) கோச்சாரம் (கேபி முறையில் கிரஹகங்கள் பெயர்ச்சி பலன்கள், உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

10) கேபி ஜோதிட முறையில் - திருமணப் பொருத்தம் (கிரக பொருத்தம், பாவ பொருத்தம், தசா புத்தி பொருத்தம் அதாவது இப்பொருத்தங்கள் மூலம் ஆண், பெண் இருவரிடையே குண ஒற்றுமை, ஆரோக்கியம், ஆயுள், இனக்கம், இல்லறம், குடும்ப விருத்தி, குழந்தை பிறப்பு, பொருள் சேர்க்கை மற்றும் தொழில் ஏற்றம் போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

11) வேத ஜோதிட முறையில் - திருமணம் பொருத்தம் (லக்னம் பொருத்தம், ராசி பொருத்தம், 10 பொருத்தங்கள், செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், புனர்பூ தோசம், தோசம் உள்ள நட்சத்திரங்கள், ஏழரை சனி, குரு பலன் போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

12) இறைவழிபாடு – பரிகாரம் (ஜாதகத்தின் படி எண்ணிய காரியம் நடக்க, பிரச்சனைகள் தீர்க்க கிரஹக வலிமையை பொருத்து உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

13) துருவ கணிதம் (தந்தை உடன் பிறந்தவர்கள், தாய் உடன் பிறந்தவர்கள், ஜாகர் உடன் பிறந்தவர்கள், குழந்தைகள் உடைய எண்ணிக்கை, தந்தை வழி தாத்தா பாட்டி, தாய் வழி தாத்தா பாட்டி ஆகியவர்களை பற்றி உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

14) பஞ்சாங்க விளக்கம் (திதிகள், யோகங்கள், கரணங்கள், வாரங்கள், கிரக ஓரைகள், மேல் நோக்கு நாட்கள், கீழ் நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள், ம்ருத நட்சத்திரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, கரிநாள், தனிய நாட்கள், தனிஷ்டா பஞ்சமி, முகூர்த்தம், தாரா பலன், ருது பலன், வாஸ்து, தமிழ் வருடங்கள், அயணங்கள், யுகங்கள் போன்றவை பஞ்சாங்கத்தை பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்படும்.)

மேற்கூறிய கேபி ஜோதிடம் என்கின்ற பெரும் தலைப்புகளைக் கொண்டு, கேபி ஜோதிடத்தில் தொழில் முறை விசயங்களை மொத்தம் 14 சிறு தலைப்புகளில், தெளிவான விளக்கங்களோடு, 20 வீடியோ பதிவுகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்

பயிற்சி கட்டணம்     :     உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி – 3), முழுமையாக பயிற்சி பெற பயிற்சி கட்டணம் 3,000 ரூபாய்.